NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரித்தானியாவில் புதிய வகை corona virus கண்டுபிடிப்பு…!

COVID VIRUS மாறுபாடு உலகில் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதன் திரிபானது பிரித்தானியாவிலும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய கோவிட் வைரஸினுடைய மாறுபாடானது BA.2.86 அல்லது ‘Pirola’ என அழைக்கப்படுகிறது.

எனினும் புதிய வைரஸின் தாக்கம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த வைரஸானது தனது புரத அமைப்பில் 30 மாறுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக வேகமாக பரவக்கூடும் என்பதுடன், ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசியின் தாக்கத்தை தாண்டி தொற்றை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒமிக்ரோன் வைரஸ் மிதமானது என்று கூறப்பட்ட போதிலும் அது ஏராளமான உயிர்களை பலிகொண்டது.

தற்போது இந்த pirola வைரஸ் தொடர்பில் நான்கு முக்கிய அறிகுறிகளைக் கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் மருத்துவர்கள், அதிக காய்ச்சல், இருமல், ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உடனே மருத்துவப்பரிசோதனை செய்துகொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

சுவை மற்றும் வாசனை இழப்பு.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles