ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், ‘வாக்னர்’ கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் மற்றும் ‘வாக்னர்’ படைப்பிரிவின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலரைக் கொன்ற விமான விபத்து குறித்து கருத்து தெரிவித்தார்.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றிய புடின், எவ்ஜெனி பிரிகோசின் மற்றும் வாக்னரின் பிற உறுப்பினர்கள் இறந்தது பரிதாபம் எனத் தெரிவித்திருந்தார்.
எவ்ஜெனி பிரிகோசின் மோசமான முடிவுகளை எடுத்ததாகவும் புடின் விளக்கினார். விமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலை தெரிவிக்க ரஷ்யா ஜனாதிபதி புடினும் மறக்கவில்லை.
எவ்ஜெனி பிரிகோசின், ஒரு காலத்தில் புடினின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவர். சில மாதங்களுக்கு முன், புடினுக்கும், ரஷ்ய அரசுக்கும், இராணுவத்துக்கும் சவாலாக மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.