NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்!

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரிலிருந்து அவுஸ்திரேலியா அணியின் வீரர் மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

குறித்த தொடரானது எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து அவுஸ்திரேலியா அணியின் வீரர் மேக்ஸ்வெல் உபாதை காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ண தொடரில் பங்குபற்ற அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles