(R.M Sajjath)
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றதுடன், பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
WEATHER_VOICE
இதனிடையே, கடந்த 24 மணித்தியாலங்களில் காலி மாவட்டத்தில் 127.7 மில்லி மீற்றர் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்தோடு, நெலுவ, தவலம, ஹினிந்தும போன்ற பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஜிங் கங்கையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதுடன், பல பகுதிகளில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வேகப் பலகைகள் மற்றும் எச்சரிக்கை இலத்திரனியல் பலகைகள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நாட்டில் பெய்து வரும் மழைக்காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீதிகளில் நீர் வழிந்தோடுவதால் போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளதாக எமது பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர்.