தென் அமெரிக்க கால்பந்து உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றின் முதல் இரண்டு சுற்றுகளுக்கான உருகுவே அணியில் இருந்து மூத்த வீரர்களான எடின்சன் கவானி, லூயிஸ் சுரேஸ் ஆகியோரை புதிய பயிற்சியாளர் மார்செலோ பீல்சா நேற்று (04) வெளியேற்றினார்.
கடந்த மே மாதம் உருகுவே பயிற்சியாளராக பீல்சா பொறுப்பேற்றார்.
கவானி, சுரேஸ் ஆகிய இருவரும் இப்போது தென் அமெரிக்க கிளப்புகளுக்காக விளையாடுகிறார்கள். கவானி ஆர்ஜென்ரீனாவில் போகா ஜூனியர்ஸ்ஸிலும், சுரேஸ் பிறேஸிலில் கிரேமியோவுக்காகவும் விளையாடுகிறார்கள்.