நடிகர் மாரிமுத்து நேற்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து மரணமடைந்தால், அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என கேள்வி எழுந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மாரிமுத்து நடித்து வந்த இந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை தகவல் என தெரியவில்லை. நடிகர் வேல ராமமூர்த்தி வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான நடிகர், மேலும் பிரபலமான எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.