இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அத்துடன் அவருடன் இணைந்து அவரது அரசாங்கமும் அதற்கு பதிலளிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு தனியார் தொலைகாட்சி செய்தி சேவையில் மட்டுமே கூறப்படுவதனால் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
தற்போது பல்வேறு புலனாய்வுத் துறைகள் ஊடாக இது தொடர்பாக பல விசாரணைகள் நடத்தப்படுவதால், அவற்றுக்கு பதில் வழங்குப்போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால், தனிப்பட்ட முறையில் மட்டுமே பதிலளிக்க முடியும் என ஜனாதிபதி உட்பட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.