NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“மார்க் ஆண்டனி” பட விமர்சனம்

தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் தன்னுடைய திரைக்கதையின் மூலம் நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக திரையில் காட்டியுள்ளார் இயக்குநர் “ஆதிக் ரவிச்சந்திரன்”

அதற்கு பாராட்டு. இயக்குனராக இதற்கு முன் இவர் இயக்கிய படங்களால் இவர் மீது இருந்த பார்வை, மார்க் ஆண்டனி படத்திற்கு பின் முற்றிலும் மாறக்கூடும். முதல் பாதியின் துவக்கத்தில் ஒரு 30 நிமிடங்கள் தொய்வு இருந்தது.

குறிப்பாக G.V பிரகாஷ் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வேறLeval . விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஜி.வியின் பின்னணி இசையும் முக்கிய காரணம். மேலும் பழைய பாடல்களை அருமையாக Remix செய்து திரையரங்கில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து விட்டார் G.V.

பல வருட முயற்சிக்கு பின் 1975ல் Phone மூலம் Time Travel செய்து பேசக்கூடிய கருவியை கண்டுபிடிக்கிறார் செல்வராகவன். இந்த கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் மாற்றுகிறார்.

அப்படி அவர் செய்யும் முயற்சியில் அவருடைய உயிர் பறிபோகிறது. 20 ஆண்டுகளுக்கு பின் 1995ல் இந்தTime Travel Phone மகன் விஷால் இடம் கிடைக்க, இதை வைத்து தனது தந்தை ஆண்டனியால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான விஷயங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

இதன்பின் என்ன நடந்தது? இதில் வில்லன் ஜாக்கி பாண்டியனின்பங்கு என்ன என்பது தான் படத்தின் மீதி கதை.

Logic மீறல்கள் இருந்தாலும், முழுக்க முழுக்க நம்மை சிரிக்க வைத்துவிட்டார். ஒளிப்பதிவில் எந்த ஒரு குறையும் இல்லை, பக்கா. Action காட்சிகள் படத்திற்கு பலம். Editing படத்தை தாங்கி நிற்கிறது. கலை இயக்கம் மற்றும் ஆடை வடிவமைப்பு நம்மை 1970ஸ் மற்றும் 1990ஸ் காலகட்டத்திற்கு கூட்டி செல்கிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles