நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், வடமேல் மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.