தேசிய மீலாத்துன் நபி விழாவை எதிர்வரும் 28 ஆம் திகதி நடாத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த போதிலும், அன்றைய தினம் ஜனாதிபதி நாட்டில் இருக்க மாட்டார் என்பதனால் நிகழ்வுகள் பின்போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி இதில் கட்டாயம் கலந்துகொள்ள இருப்பதால் அவர் திகதியை குறிப்பிட்ட பின்னர் நிகழ்வுத் திகதி குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இவ்விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடாத்துவதற்கு தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தேசிய மீலாத்துன் நபி விழா இவ்வருடம் மன்னார் மாவட்டத்தின் முசலியில் நடாத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானித்ததுக்கு அமைவாக இதற்கான ஆயத்த முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.