ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வட கொரியாவின் கொடியைப் பயன்படுத்துவதை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (OCA) செயல் தலைவர் ரந்தீர் சிங் ஆதரித்துள்ளார் – ஆனால் இந்த முடிவுக்கு உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பான வாடா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கொரியாவின் ஜனநாயக மக்கள் குடியரசு ஊக்கமருந்து எதிர்ப்புக் குழு (DPRK ADC) ஒக்டோபர் 2021 இல் உலக ஊக்கமருந்து எதிர்ப்புச் சட்டத்திற்கு இணங்கவில்லை. ஆகையால், WADA தடைகளின் கீழ், DPRK ADC இணங்காத வரை, ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளைத் தவிர மற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளில் வட கொரியாவின் தேசியக் கொடியை பறக்கவிட முடியாது.
ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு ஆரம்ப விழாவில் 44 பேருடன், நேற்றைய தினம் நாட்டின் கொடியுடன் வட கொரியா பங்கேற்றது. ஓசிஏ, வட கொரியா ஆகியவை கொடியின் பயன்பாடு குறித்து வாடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங் கூறினார்.