படத்தில் சித்தார்த் தன் அண்ணன், அண்ணி, அண்ணன் மகளுடன் சந்தோஷமாக எளிமையான அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் சித்தார்த்தின் அண்ணன் இறந்து விடுகிறார்.
என்ன செய்வது என்று புரியாமல் சித்தார்த் பரிதவித்து நிற்கிறார். பின் தன்னுடைய அம்மாவை விட சித்தப்பாவான சித்தார்த் மீது தான் அதிக பாசம் வைக்கிறார் அண்ணன் மகள். அதுமட்டுமில்லாமல் சித்தார்த்தை அவர் சித்தா என்று பாசமாக அழைக்கிறார்.
இதனால் சித்தார்த்திற்கும் தன்னுடைய அண்ணன் மகள் மீது அதிக பாசம் ஏற்படுகிறது. இதற்கிடையில் சித்தார்த் நிமிஷாவை காதலிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஒருநாள் திடீரென்று குழந்தை காணாமல் போகிறது.
ஏன் அந்த குழந்தை காணாமல் போனது? சித்தார்த் குழந்தையை கண்டுபிடித்தார்களா? சித்தார்த் அண்ணனின் இறப்பிற்கு காரணம்? என்பதே படத்தின் மீதி கதை.
இயக்குநரும் கதைக்களத்தை சிறப்பாக சென்றிருக்கிறார். காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்திலும் இயக்குநர் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
படத்தில் சிறுவர்கள் பெற்றோர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜை இயக்குனர் அழகாக காண்பித்து இருக்கிறார். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த்தின் சித்தா படம் சுமாராக இருக்கிறது.