NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் வீரர் தனுஷ்க இலங்கையில் : மீண்டும் கிரிக்கெட்டில் ஈடுபடவும் தீர்மானம் !

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (03) இலங்கையை வந்தடைந்த கிரிக்கெட் வீரர், சிட்னியில் 11 மாத கால விசாரணையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டங்களின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணிடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று கூறினார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்றும், அதன் மூலம் அவர் தனது விசாரணையின் போது தனது சட்டத் தேவைகளுக்காக செலவழித்த பணத்திற்காக இழப்பீடு கோரலாம் என்றும் குணதிலக தெரிவித்தார்.

தான் விளையாட்டில் இருந்து பெற்ற அனுபவத்தினால் 11 மாதங்களுக்கும் மேலாக இந்த அழுத்தத்தை தாங்கியதாகவும், ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணத்தினை தவறவிட்டதற்கு வருத்தம் தெரிவித்த குணதிலக, கிரிக்கெட்டைத் தொடர்வதற்கு விரைவில் பயிற்சியில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

அத்துடன் காதலியுடன் தான் நீங்கள் இலங்கைக்கு வந்துள்ளீர்களா என்று ஊடகவியலாளர் தனுஷ்கவிடம் கேட்ட போது, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று தனுஷ்க வினவினார்.

அதற்கு அவர்கள் நீங்கள் காதலியுடன் தான் வந்துள்ளீர்கள் எனக்கூற, நீங்கள் நினைப்பது போன்றே எடுத்துகொள்வோம் என தனுஷ்க சிரித்தவாறு கூறினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles