NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிவகார்த்திகேயன் குறித்து இமான் முதல் மனைவி-மோனிகா ரிச்சர்ட்

முன்னணி இசையமைப்பாளரான D.இமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது.

அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். இதன் பிறகு இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நேர்காணல் குறித்து இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறியுள்ளதாவது, இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் Suport பண்ணவில்லை அது இமானுக்கு பிடிக்கவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னாடி பொண்ணையெல்லாம் பார்த்து வைத்துவிட்டுதான், இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார்.

இமானுக்கு பட வாய்ப்புகள் சரியாக இல்லை. அதனால்தான், இப்படியெல்லாம் பேசி பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார்” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share:

Related Articles