கலகெதர நீதவான் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக ஆஜராகியிருந்த சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் நபரை பொலிஸாரும், சிறைச்சாலை அதிகாரிகளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கலகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கழுத்து நெரிக்கப்பட்ட சட்டத்தரணி மருத்துவ சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் கண்டி – களுவான பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
760 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கலகெதர பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.