சீனாவின், ஹாங்சோவில் இடம்பெற்ற ஆசிய பரா விளையாட்டு போட்டியில் இலங்கை வீரர் சமித துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டியிலேயே அவர் வெள்ளி பதக்கம் வென்றார். அவர் 64.09 மீற்றர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த போட்டியில் இந்தியாவின் சுமித் ஆன்டில் 73.29 மீற்றர் தூரம் எறிந்து தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவின் மற்றொரு வீரரான புஷ்பேந்திர சிங் 62.06 மீற்றர் தூரம் எறிந்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.