NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மது போதையில் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய பெண்கள் – கொழும்பில் சம்பவம்!

கொழும்பு – கிரகரி வீதிக்கு அருகில் நேற்று (05) நள்ளிரவு 12.00 மணியளவில் காரை நிறுத்தி மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படும் இரு பெண்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியதாக கூறப்படும் இரண்டு பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பெண்கள் பயணித்த காரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிக்கும் 30 மற்றும் 43 வயதுடைய இரண்டு பெண்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு பொலிஸ் நிலையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles