NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹோட்டலுக்குள் அதிவேகமாக புகுந்த கார் – 5 பேர் பலி!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த ஹோட்டலில் வீதியோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடத்தில் திடீரென வேகமாக வந்த சொகுசு காரஅங்கு உணவருந்தி கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

காயம் அடைந்த 7 பேர் வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, காரை ஓட்டிவந்த 68 வயது நபரை கைது செய்துள்ளனர்.

காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share:

Related Articles