(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது என நாமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.