ஜா-எல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக ஆற்றில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருள் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று பொலிஸ் Ca வண்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது, சந்தேக நபர் கைவிலங்குடன் அருகில் உள்ள ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்றபோது, சந்தேக நபரை கைது செய்ய மூவருடனான பொலிஸ் அதிகாரிகள் குழுவும் ஆற்றில் குதித்துள்ளனர்.
மேலும், இவர் ஜா -எல பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று வந்து 3 1/2 வருடங்கள் ஆவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.