பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு மற்றுமொரு சேவை நீடிப்பை ஜனாதிபதி ரணில் வழங்கியபோதும், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி ஆலோசனை நடத்தி வருகிறார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்த பதவியில் அமர்த்துமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவை பொலிஸ் மா அதிபர் பதவியில் அமர்த்த ரணில் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பில் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதில் பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.