17ஆவது IPL போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 22ஆம் திகதி தொடங்கவுள்ளது.
நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி இந்த சீசனிலும் விளையாடவுள்ளார்.
கடந்த போட்டித் தொடரின் போது அவரிடம் ஓய்வு பற்றி வினவிய போது, இரசிகர்களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட முயற்சி செய்வேன் எனக் கூறினார். அதன்படி தோனி IPL போட்டியில் விளையாட ஆயத்தமாகி வருகிறார்.
அவர் கடந்த ஜூன் மாதம் முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் குணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் டோனி 10 நாளில் பயிற்சியை தொடங்குவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.