தொடர் குடியிருப்பு அறையொன்றிலிருந்து இளம் தாய் மற்றும் 2 வயது குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி – கெஹெல் ஓவிடிகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் தாயும், 2 வயதுடைய ஆண் குழந்தையுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.