VAT வரி காரணமாக, பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை தற்போது 350 ரூபாவாக அதிகரித்துள்ளது. 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை 320 ரூபாவாகவும் சில பகுதிகளில் அதிகரிப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.