NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விற்பனையில் வீழ்ச்சிக்கண்டு வரும் Samsung!

முன்னணி பன்னாட்டு மின்னணு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான Samsung நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தென்கொரிய சுவோன்(Suwon) நகரில் உள்ளது.

கணினிகளில் உபயோகப்படுத்தப்படும் “சிப்” (chip), நவீன தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்களை இலங்கை உட்பட உலகெங்கும் தயாரித்து விற்பதில் Samsung முன்னணியில் உள்ளது.

இந்நிலையில், Samsung வெளியிட்டுள்ள ஒக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையிலான காலாண்டு கணக்கில், அதன் இலாபம் $2.13 பில்லியன் எனும் அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், 2022ல் இதே காலாண்டு இலாபத்துடன் ஒப்பிடும் போது இது 35 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி, வரவிருக்கும் மாதங்களிலும் இலாபம் எதிர்பார்த்ததை விட குறையுமென அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles