அநுராதபுரத்தில் வீடொன்றில் இருந்து 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (09) பிற்பகல் குறித்த மாணவன் தனது வீட்டில் உள்ள அறையில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவனின் உடலில் பல இடங்களில் கீறல் காயங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் நடத்திய சோதனையில், இறந்த மாணவனின் படுக்கையின் மெத்தையின் கீழ், போதைப்பொருள் வகை, தீப்பெட்டி, சிம் அட்டைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.