NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பளித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கியது உயர்நீதிமன்றம்!

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பளித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயிரிழந்த பரத பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திரஇ மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கஸாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்படி, பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் முன்னாள் ஜனாதிபதி உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லை என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles