தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் சற்று முன்னர் ஜீப் ரக வாகனத்தை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற போது, குறித்த வாகனத்தில் 5 பேர் பயணித்துள்ளதுடன் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த ஜீப்பில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் இருந்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.