NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் தனிமனிதர்களின் சிறப்பான பணிகளுக்காக வழங்கப்படும் மரியாதைகளின் படிநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பத்ம விருதுகளில் மூன்று பிரிவுகள் உள்ளன: அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன்.

பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிப்பார். இதில் 7 விளையாட்டு பிரபலங்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

அதன்படி, 43 வயதில் டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்த ரோகன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா, மல்லர்கம்ப பயிற்சியாளர் உதய் விஷ்வநாத் தேஷ்பாண்டே, வில்வித்தை பயிற்சியாளர் பூர்ணிமா மஹட்டோ, கவுரவ் கண்ணா (பாரா பேட்மிண்டன் பயிற்சியாளர்), சதேந்திர சிங் லோஹியா (நீச்சல்), ஹர்பிந்தர் சிங் (ஆக்கி பயிற்சியாளர்) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles