ஜேர்மனியில் 62 வயதான நபர் ஒருவர் 217 முறை ‘கொவிட்-19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த 29 மாதங்களாக தனியார் மருத்துவமனைகளிலிருந்து ‘கொவிட் 19’ நோய்த்தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளார்.
குறித்த நபரிடம் மருத்துவ ஆய்வை மேற்கொண்ட எர்லாங்கன்-நூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ‘கொவிட்-19’க்கு எதிராக அவர் 217 தடுப்பூசிகளைப் பெற்றிருந்தாலும் அவருக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லையென மேலும் குறிப்பிட்டுள்ளனர்.