மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனத்தை வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிறி தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக இழுபறி நிலையில் இருந்த குறித்த நியமனம் தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிதியமைச்சின் முகாமைத்துவ சேவை திணைக்களம், குறித்த ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதனடிப்படையில், நியமனம் வழங்கும் திகதி தொடர்பான அறிவிப்பை, ஆசிரிய உதவியாளர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிறி குறிப்பிட்டார்.