உலகளாவிய ரீதியில் உள்ள மக்கள் இந்த நூற்றாண்டின் இறுதியில் பாரிய விளைவை சந்திக்க நேரிடும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
2100இல் அனைத்து நாடுகளிலும் குழந்தை பிறப்பு வீதம் சரிவை சந்திக்கும் என அமெரிக்காவின் Dredge நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது தெரியவந்துள்ளது.
இது ஒரு ஆபத்தான சூழ்நிலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆய்வுக்காக உலகளாவிய ரீதியில் எடுத்துக்கொள்ளப்பட்ட 204 நாடுகளுள் 198 நாடுகளின் சனத்தொகை எதிர்வரும் காலங்களில் குறைவடையும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன்படி, உலக நாடுகளில் சனத்தொகையை தொடர முடியாத அளவுக்கு குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது.
இதேவேளை, மிகவும் ஏழை நாடுகளில் அதிக குழந்தை பிறப்பு வீதங்கள் பதிவாகியுள்ளன.
2100 இல் சனத்தொகையை மேலும் தக்க வைத்துக்கொள்ளும் வாய்ப்பு சோமாலியா, டொங்கா , நைஜர், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கப்பட்டுள்ளன.
உலகின் செல்வந்த நாடுகள் பொருளாதாரத்திலும் ஏழை நாடுகள் சனத்தொகை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், குழந்தை பிறப்பு வீதம் அதிகமான மற்றும் குறைவான நாடுகள் என பிரித்துப்பார்க்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.