NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10 வருடங்கள் கழித்து நிறைவேறப்போகும் இரு நண்பர்களின் கனவு

லவ் டுடே திரைப்படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘LIC: Love Insurance Corporation’ எனும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

ஒ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, பிரதீப்பின் நெருங்கிய நண்பராவார். இவர்கள் இருவரும் ஒரே காலெஜில் படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ஒரு காணொளியை வெளியிட்டுள்ளனர். அதில் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையப்போவதாகவும் அத்திரைப்படத்தின் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த காணொளியில் இது அவர்களுடைய 10 வருட கனவு என்றும் கூறியுள்ளார்.

அஸ்வத் இயக்கும் இத்திரைப்படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles