NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தக்காளியின் விலை குறைந்தது !

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை நேற்று(17) 15 ரூபாவாக குறைந்துள்ளது.

மேலும், ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விலை 40 ரூபாய் வரையும், முள்ளங்கி ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 35 ரூபாய் வரையும், ஒரு கிலோ கெக்கிரி மற்றும் வெள்ளரி மொத்த விற்பனை விலை 20 ரூபாய் வரையும், மொத்த விலை ஒரு கிலோ வெண்டைக்காய் 40 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் மரக்கறிகளை கொண்டு வந்த போதிலும், வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வராததால் விலை பெருமளவு குறைந்துள்ளது.

தம்புள்ளையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாவாக குறைந்திருந்த போதிலும், நேற்று புறக்கோட்டை மரக்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபா வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

புறக்கோட்டை காய்கறி சந்தையில் பீன்ஸ் கிலோ 120 ரூபாய்க்கும், கரட் கிலோ 300 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரி கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையானது.

Share:

Related Articles