NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகையை திருமணம் செய்து கொண்ட ஜெய்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஜெய். திருமணம் பற்றிய கேள்விகளுக்கு தனது சிரிப்பாலேயே பதில் அளித்து கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், ஜெய் மற்றும் நடிகை பிரக்யா நாக்ரா திருமணம் செய்து கொண்டதை உணர்த்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகை பிரக்யா வரலாறு முக்கியம், என்4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வைரலாகி வரும் புகைப்படத்தில் பிரக்யா கழுத்தில் தாலி அணிந்துள்ளார். இவருடன் நடிகர் ஜெய் தனது கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். இதே புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகை பிரக்யா “கடவுள் ஆசியுடன் புதிய வாழ்க்கை தொடங்கியது,” என குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் நடிகர் ஜெய் திருமணம் செய்து கொண்டாரா என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், சிலர் இந்த புகைப்படத்தின் பின்னணியில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை உற்று நோக்கி இது புதிய படத்திற்கான புரமோஷனாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles