NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் மட்டையால் தாக்கி 13 வயது மாணவன் உயிரிழப்பு…!

நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மற்றுமொரு மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்நாவலப்பிட்டி Monte Cristo தோட்டத்தின் கீழ் பகுதியைச் பதின்மூன்று வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23 ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, ​​கிரிக்கெட் மட்டையால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles