முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை எதிர்காலத்தில் ரூ. 45 வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்,சந்தையில் 35 ரூபாய் முதல் 48 ரூபாய் வரை முட்டையை நுகர்வோர் வாங்குகின்றனர் எனவும் முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.