NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட தோல்வி!

அணியாக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகல துறை வீரருமான அஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் செயின்ட் லூசியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணியின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழித்தமைக்கு வருந்துகிறோம் எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

“ஒரு அணியாக இருந்த எங்கள் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிந்துவிட்டதற்காக மிகவும் வருந்துகிறோம். 

நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். அணியாக இங்கு வந்ததை எங்களால் செய்ய முடியவில்லை. 

எப்போதும் வெற்றிபெறுவதை நோக்காக கொண்டே விளையாடி வருகின்றோம். ஆனால் மழை எங்களை நன்றாக விளையாட விடாமல் தடுத்ததுவிட்டது. 

“நாங்கள் நிறைய சவால்களை சந்தித்தோம், ஆனால் அவை கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல. நாங்கள் சூப்பர் 8 சுற்றுக்கு செல்லாதது துரதிர்ஷ்டவசமானது.”

“எந்த அணியையும் நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இதன்மூலம் நாங்கள் எங்களை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது. 

குறிப்பாக முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் விளையாடிய விதம், மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 

நாங்கள் மனம் உடைந்துள்ளோம், மேலும் எங்களுக்குள்ளேயே நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நடப்பு இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் நாளை மோதுகின்றது.

இந்தப் போட்டி மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் காலை 6 மணிக்கு ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles