NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அத்தியாவசிய சேவைகள் பெயரிடப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சில அத்தியாவசிய சேவைகளைப் பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படிஇ மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும், கனிய எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிபொருள் வழங்கல் அல்லது விநியோகம், மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.

மேலும், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சைக்கு தேவையான அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை அல்லது உழைப்பு ஆகியவையும் இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles