NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அபார வெற்றியுடன் புள்ளிப்பட்டியின் முதலிடத்தில் தம்புள்ள ஓரா : இன்றும் 2 போட்டிகள் !

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான LPL தொடரின் 16வது போட்டியில் அலெக்ஸ் ரொஸ் மற்றும் பென் மெக்டோமர்ட் ஆகியோரின் அபாரமான துடுப்பாட்ட பிரகாசிப்புகளின் உதவியுடன் தம்புள்ள ஓரா அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணி நாணய முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பி லவ் கண்டி அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து தம்புள்ள ஓரா அணி பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தது. எனினும் கட்டாய வெற்றியை நோக்கி கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி களமிறங்கியிருந்தது.

தம்புள்ள ஓரா அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி வேகமாக ஓட்டங்களை குவிக்கத்தொடங்கிய போதும்,தொடர்ச்சியாக விக்கெட்டுகளையும் பறிகொடுக்க தொடங்கியிருந்தது.

கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டதுடன், 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அதேநேரம் இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற தம்புள்ள ஓரா அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துக்கொண்டது.

இந்நிலையில் இன்றும் LPL தொடரில் 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
தொடரின் 17 வது போட்டி ஜப்னா கிங்ஸ் மற்றும் போல் ட்டைடன்ஸ் அணிகளுக்கிடையிலும் தொடரின் 18 வது போட்டி கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் பி லவ் கண்டி அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles