NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவில் விடுமுறை கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அமெரிக்காவில் ஜூன்டீன்த் விடுமுறை கொண்டாட்டத்தின் போது, திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், சிறுவர், சிறுமிகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மில்வாக்கி நகரில் கிரேட்டர் பிலடெல்பியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்ததாக நேரில் பார்த்தவர்களும், நேரில் படம் பிடித்த ஒருவரும் உறுதிப்படுத்தினர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 6 பேரில் ஒரு சிறுவன் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அவன் குற்றவாளியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், உயிருக்கு ஆபத்தான அளவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Related Articles