அமெரிக்க மக்கள் தமது அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நிலையில், இன்றுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவடைகின்றன.
வேட்ப்பாளர்கள் இருவரும் முக்கியமான மாநிலங்களில் தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கமலா ஹரிஸ் பென்சில்வேனியாவில் தமது இறுதி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் வட கரோலினா மற்றும் பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.