NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு இணையத்தள சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

இலங்கையின் தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதத்தின் நேரடி ஒளிபரப்பின் போது அமைச்சரின் ஆபஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலைத் தொடர்ந்துஇ ஹேக்கர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச உள்ளடக்கத்தை வழங்கும் வலைத்தளத்துடன் இணைக்கும் இணைப்பைச் சேர்த்துள்ளனர்.

பேஸ்புக் கணக்கை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles