NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட அறிவித்தல்!

அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நாளை (26) முதல் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து எம்.பி.மாருக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம் இதனை அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஆனால், அதற்கான காரணம் குறித்து எம்.பி.மார்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த பிரேரணையை அவசர மசோதாவாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை (01) பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  



Share:

Related Articles