இன்று முதல் தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா அறிவித்துள்ளார்.
பேஸ்புக நேரலையில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தான் நேர்மையான, மக்களின் அரசியல் தலைவராக இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும், பிறிதொரு கட்சிக்குள் சென்று அவர்களின் கொள்கைகளை மாற்றவிரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
முதலில் அரசியலுக்கு வர விரும்பியிருக்கவில்லை. எனினும் தற்போது நேரடி அரசியலில் ஈடுபட முடிவுசெய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதற்கா புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளேன். அதில் இளைஞர்கள், படித்த மக்களை இணைத்துக்கொண்டு உண்மையான அரசியல் ஒன்றைச் செய்யவுள்ளேன்.
இந்நிலையில், எனக்கு நிதியுதவி செய்ய விரும்புகின்றவர்கள் என்னுடன் நேரடியாக தொடர்புகொண்டு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழுக்கு அழகென்று பெயர்… அதுபோல் நாங்கள் அழகான அரசியல் ஒன்றை செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.