NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது..!

தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிடும் பா. அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03) வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்தநிகழ்வில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் உட்பட தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கான நிரந்த தீர்வு தொடர்பில் 10 விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அதில் முதலாவதாக, இலங்கையின் புதிய அரசியலமைப்பானது, தமிழ் மக்களை இறைமையும், சுயநிர்ணய உரிமையும் கொண்ட தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles