NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘அஸ்வெசும’ திட்டத்திற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு!

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் இதுவரை 8 இலட்சத்து 35 ஆயிரம் மேன்முறையீடுகளும், 11 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இன்று பிற்பகலுக்கு முன்னர் பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் அடுத்த மாதம் கோரப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles