NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘அஸ்வெசும’ நலன்புரி திட்ட கணக்கெடுப்பின் மூலம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – நாமல் MP

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அஸ்வெசும நலன்புரி திட்ட கணக்கெடுப்பின் மூலம் மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனால் நலன்புரி திட்டம் கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும், நலன்புரி தேவையற்றவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் நாமல் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நலன்புரி திட்டம் தொடர்பான கணக்கெடுப்புகளை நடத்துவதாக இருந்தால், அதை முறையாக செய்து, தவறுகளை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles