NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆசியக் கிண்ணம் – டிக்கெட் விலைகள் குறைப்பு!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் 1,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9, 12, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் லோவர் பிளொக் C மற்றும் D ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை 1,000 ரூபாய்க்கு ரசிகர்கள் வாங்க முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles