(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தென் கொரியாவில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் நேற்று (06) நடைபெற்ற பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய 12 வீராங்கனைகளில் இலங்கையின் ரனிந்தி பெஹன்சா கமமே கடைசி இடத்தைப் பெற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து, 1.60 மீற்றர் உயரத்தை தனது இரண்டாவது முயற்சியில் தாவிய ரனிந்து பெஹன்சா, 1.65 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு எடுத்த 3 முயற்சிகளிலும் தோல்வி கண்டார். அத்துடன் அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் வீராங்கனை பானோகோன் சய்புல்லா ஈவா 1.84 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.







